Wednesday, September 1, 2010

கவிஞர் புவியரசு உடுமலை வட்டத்தில் உள்ள லிங்கவநாயக்கன்புதூரில்சுப்பையா - தாயம்மாள் தம்பதிகளுக்கு 19.09.1931-ல் பிறந்தார் .இவரதுஇயற்பெயர் சு.சகன்னாதன் . கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்டர்மீடியட்பட்டமும் ,பேரூர் தமிழ் கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டமும் காந்தவியலில்மருத்தவ பட்டயமும் பெற்றுள்ளார் .தற்போது கோவையில் வசித்து வருகிறார்முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஆசிரியர் பணி புரிந்தவர். கவிதை, நாடகம், பத்திரிக்கை, வானொலி, திரைப்படம்,ஓவியம் ,தொலைக்காட்சி முதலியபல துறைகளிலும் புதுமைகள் செய்து வருபவர். 80 புத்தகங்கள் எழுதியுள்ளார் . ஏழு கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. இவரது மூன்றாம் பிறை என்ற நாடகக்காவியம் மாநில அளவில் முதல் பரிசுக்கான தங்கபதக்கம் பெற்றுள்ளது .
முதலில் சர்வோதயா இயக்கத்திலும் பின்னர் தமிழரசு இயக்கத்திலும் பங்குகொண்டு தமிழ் ஆட்சி மொழி- பயிற்சி மொழி -மற்றும் தமிழகஎல்லைப்போராட்டங்களிலும் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றவர்.
உலகின் பல்வேறு மொழிக் கவிதைகளையும் சிறுகதை நாடகங்களையும் இவர்தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் .இவரது கவிதைகள் மலையாளம்ஹிந்தி,கன்னடம், சிங்களம் ஆங்கிலம் ,அங்கேரியம், ரஷ்யன் ஆகியமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ,
இவர் ஷேக்ஸ்பியர் ,கலீல் ஜிப்ரான், உமர்கயாம், ஓஷோ, தஸ்தயேவ்ஸ்கி, கிரண்பேடி, தாகூர், நஸ்ருல் இஸ்லாம், அப்துல் கலாம், போன்றவர்களின்படைப்புக்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
வானொலியில் இலக்கிய உரை பேட்டி கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் முதலியவற்றில் நிறையப்பங்கு கொண்டுள்ளார் சிறந்த வானொலிநாடகத்திற்கான பரிசு பெற்றவர் இவரது மனிதன் நாடகம் அகில இந்தியஅனைத்து வானொலி நிலையங்களும் 19 மொழிகளில் தயாரித்து ஒலிபரப்புசெய்தன
இவரது ஞானக்கிளி என்ற 13 வாரத்தொடர் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று .
நீண்டகாலம் திரைப்படத் துறையில் பங்கு கொண்டிருந்த இவர் கேரள திரைப்படவளர்ச்சிக் கழகத்தின் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார் .கமல்ஹாசன்அவர்களுடன் நீண்டகாலத் தொடர்பு கொண்டிருப்பவர் ஹவுஸ்புல்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் .
நீண்டகால நாடகத்துறை அனுபவம் பெற்ற இவரது எல்லா மேடை நாடகங்களும்பல முதல் பரிசுகளைப் பெற்றவை. அதற்காக நாடகக்கலாரத்தினம் என்ற விருதுபெற்றுள்ளார் சங்கமம் என்ற நாடக அமைப்பின் தலைவராக இருந்து நவீனநாடகங்களை அரங்கேற்றி வருகிறார் . இவரது மூன்றாம் பிறை நாடகக்காவியம்பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது
இவர் சர்வோதயா சங்கத்தின் கீதை அரசு, சோவியத் லேண்டு தங்க பதக்கம்கமல்ஹாசன் அவர்களின் அன்னை ராஜலக்ஷ்மி நினைவுபரிசு , திருப்பூர்தமிழ்ச்சங்கத்தின் ஷேக்ஸ்பியர் நாடகத்திற்கான முதல் பரிசு, லில்லிதேவசிகாமணி இலக்கியப்பரிசு ,புல்லாங்குழலே கவிதைத் தொகுதிக்கானதேவமகள் நினைவுப்பரிசு , கேரள கலாச்சார மையத்தின் சாகித்ய புரஸ்கார்விருது ஆகியவையும் பெற்றுள்ளார் .கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருதும்பெற்றுள்ளார். ,
  • 2007- ல் சாகித்ய அகாடமி விருது [புரட்சிக்காரன் என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பெற்றார்] .
  • மிர்தாதின் புத்தகம் என்ற நூலுக்கு நல்லி திசை எட்டும் பரிசு.
  • தமிழ்ப்பேரறிஞர் -தேவாச்சி அம்மாள் அறக்கட்டளை விருது
  • முக்கூடல் - கவிதை தொகுதிக்கு தமிழக அரசின் முதல்பரிசு
  • கலைஞர் பொற்கிழி விருது -2008-ல் 1 லட்சம் ரூபாய்
  • 2010- ல் சாகித்ய அகாடமி விருது [இரண்டாவது முறையாக கையொப்பம் கவிதைத்தொகுதிக்கு பெற்றார் ]

வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவர் முக்கியமானவர் ..

Monday, August 30, 2010

தமிழாக்கம்

இந்திரா -இந்தியா-75

நந்தா [வரலாறு]


கார்மலின் - கொங்கனி நாவல்

மிர்தாதின் புத்தகம் - தத்துவம்



ஓஷோவின்

கிருஷ்ணா

இப்போதே பரவசம்

வாழ்க்கையே ஒரு திருவிழா

ஆனந்த நடனம்

இரண்டாவது கோப்பைத் தேநீர்

நீ, நீயாக இரு

மூன்றாவது கோப்பைத் தேநீர்

புல் தானாகவே வளர்கிறது

பூ மலரும் புல்லாங்குழல்

அன்பு ஒரு ஆன்மிக அனுபவம்

உன் அற்புத ரோஜா மலரட்டும்

மறைந்திருக்கும் உண்மைகள்

அன்பின் அதிர்வுகள்

ஆரம்பம் நீதான்

ஒரு கோப்பைத் தேநீர்

அற்புதத்தின் அற்புதம்

ஆன்மீகத்தில் பொருந்தாத மறை ஞானியின் சுய சரிதம்




ஜிப்ரானின்


முறிந்த சிறகுகள்

தீர்க்கதரிசி

ஞானிகளின் தோட்டம்

ஞானகளஞ்சியம்

பொன்மணிப் புதையல்

ஷேக்ஸ்பியரின்

ஹாம்லெட்

ஒதெல்லோ

ரோமியோ ஜூலியட்



ப்ராம் ஸ்டோகேரின் டிராகுலா

எச் .ஜி .வெல்சின் மாயமனிதன்

ஜேம்ஸ் ஹாட்லிஜெசின்

கனவுகளைத் தேடியவன்

சொர்க்கம் என் பையில்

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள்


மேரி செல்லியின் புதிய மனிதனின் பிராங்கன்ஸ்டீன்


ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள்

காலை மாலை சிந்தனைகள் - ஜேம்ஸ் ஆலன்

ஆத்ம தரிசனம் - ஜேம்ஸ் ஆலன்

வைசாலி - திரைக்கதை

கிரண்பேடி வரலாறு

உமர் கய்யாமின் ரூபாயத்

கீதாஞ்சலி -
தாகூர்

ஏகாந்தப்பறவைகள்
-தாகூர்

பொன் மொழிகள்

பழமொழிகள்

ஹேராம் திரைக்கதை வசனம்

காஸி நஸ்ருல் இஸ்லாமின் புரட்சிக்காரன்

தியானம் உங்களுக்காக

உடனடித் தியானத்திற்கான திறவுகோல்




படைப்புகள்

திருமணப்பரிசு - இலக்கியக் கட்டுரைகள்

வள்ளுவரும் இளங்கோவும் - ஆராய்ச்சி

ஔவையும் மூவேந்தரும் - சங்க இலக்கியம்

புலவர் பெருமை - சங்க இலக்கியம்

மல்லைத் துறை- நாவல்

ராஜதுரை - நாவல்

புவியரசு கவிதைகள் -கவிதைத் தொகுதி

காவலரும் பாவலரும் -சங்க இலக்கியம்

உழைப்பால் உயர்ந்த மேதை கென்னடி -வரலாறு

இது தான் - கவிதைத் தொகுதி

மீறல் - கவிதைத் தொகுதி

ஒரு முக்கிய அறிவிப்பு -கவிதைத் தொகுதி

மூன்றாம் பிறை - நாடகக் காவியம்

ஜென் கதைகள்

வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - பொன் மொழி தொகுப்பு

மீண்டும் ஜென் கதைகள்

தீர்த்தக்கரையினிலே -கட்டுரைகள்

வெள்ளை மாளிகை மர்மங்கள் -வரலாறு

சங்க இலக்கிய கதைகள்

ஊர்வாய்- சிறுகதைத் தொகுதி

மறுபடியும் - கட்டுரைகள்

இரவின் அறுவடை -பிற மொழிக்கதைகள்

திருக்குறள் - தெளிவுரை

ஒரு கவிதையின் இலக்கணம் - திரைப்பட விமர்சனம்

முக்கூடல் - கவிதைத் தொகுதி

கையொப்பம் - கவிதைத் தொகுதி


கவிதைக் கென்ன வேலி? - பிற மொழிக்கவிதைகள்

எட்டுத்திசைக்காற்று -உலகக் கவிதைகள்

மணிகண்டபுரம் மாயாவி - நாவல்

புல்லாங்குழலே - கவிதைத் தொகுதி